சுத்த சைவம், பூர்வ சைவம் , மார்க்க சைவம் ,ஆதி சைவம் , வீர சைவம் என சைவம் பல வகைப் பட்டு நின்ற கால கட்டத்தில் வீரசைவத்தின் கொள்கைகள் வசனகாரர்களைக் கவர்ந்தன. வீர சைவம் என்பது இட்ட லிங்கத்தை வழிபாடு செய்வதாகும்.குருவிடம் இருந்து பெற்றுக் கொண்ட லிங்கத்தை உடலின் மீது கட்டிக் கொள்வது இவர்கள் கொள்கையாகும்.இந்த லிங்கத்தை ஒரு போதும் இவர்கள் பிரிவதில்லை.மார்பில் சிவலிங்கத்தை அணிந்ததால் இவர்கள் “லிங்காயத் “என்றும் அழைக்கப்படுகின்றனர். [இன்றும் கூட கர்நாடகத்தில் ’லிங்காயத் ’ ஒரு பெரிய பிரிவாக வாழ்வது குறிப்பிடத் தக்கது ] உபதேசம் தருபவர் குருவாகவும்,அவர் அளிக்கும் சிவ அடையாளப் பொருள் லிங்கமாகவும் உள்ளது.அவர்கள் தாங்கள் அணிந் திருக்கும் லிங்கத்தை மட்டுமே வழிபடுகின்றனர்.இது முதியவர்களிடையே இன்றும் காணப்படுகிறது.வர்ணாசிரம முறையிலான சாதி வேறுபாடுகளை வீர சைவம் ஏற்கவில்லை. சிவ தீட்சை பெற்ற பிறகு அனைவரும் ஒன்றா கவே கருதப்பட்டனர். அறிவையும், தொழிலையும் பெரிதாகக் கருதாமல் பக்திக்கு வீர சைவர்கள் முதலிடம் தந்தனர். வீரசைவத்தினர் ’சரணர்” என்றும் அழைக்கப் பட்டனர்.சாதி ,பொருளாதார வேறபாடுகளின்மை, பெண்ணை மாயையாக விரட்டாத உயர்வு, பெண்ணுக்குச் சம மதிப்புத் தந்து போற்றிய முறைமை ஆகியவை வீர சைவத்தின் தலை சிறந்த இயல்புகளில் சிலவாகும்.
பண்டாரம் அல்லது பண்டாரத்தார் என அழைக்கப் பெறுவோர் வீரசைவ குலத்தைச் சார்ந்தவர்களாவர்,,. ஆண்டிப் பண்டாரம், பண்டராம், ஜங்கம், யோகிஸ்வரர், லிங்காயத், வைராவிகள், புலவர், கன்னடியர், ஜங்கமர் போன்ற 19 உட்பிரிவைச் சார்ந்தவர்கள். பண்டாரம் சாதியினர் பெரும்பாலும் கோவில்களில் காவடி கட்டுதல், பூக்கட்டுதல் போன்றவற்றை செய்து வருகின்றனர். தற்பொழுது அனைத்து விதமான தொழில்களும் செய்கின்றனர். இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வரப்படாத கோயில்களில் பணிபுரிபவர்கள் தான் ஆண்டிப்பண்டாரங்கள். தோற்றம் வீரசைவ சமயத்தைக் கன்னடத்தில் 1125-1165 ஆண்டுகளில் வாழ்ந்த பசவண்ணர் தோற்றுவித்தார். இவர் கன்னட பிராமணர் குலத்தில் தோன்றியவர். 14 ஆம் நூற்றாண்டில் இது தமிழ்நாட்டில் பரவத் தொடங்கியது. 15 ஆம் நூற்றாண்டில் நவலிங்க லீலை முதலான சில நூல்கள் தமிழில் தோன்றின. பிற்காலத்தில் துறைமங்கலம் சிவப்பிரகாசர் இதனை வலுவாக்கினார்.

கருத்துகள்
கருத்துரையிடுக