முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வீர சைவம்

வீர சைவம் இது இந்தியாவின் பல பகுதிகளில் தோன்றிய பழமையான தாந்த்ரீக வழிபாட்டு முறைகளை கொண்ட சைவ சமயத்தின் ஒரு பிரிவு ஆகும். வீரசைவம் ஆதிகாலங்கங்களலில் ரேணுகா சிவாச்சாரியார், தாருக சிவாச்சாரியார், யோகராம சிவாச்சாரியார்,பண்டிதரத்யா சிவாச்சாரியார், விஸ்வரத்ய சிவாச்சாரியார் போன்ற ஐந்து மிகப்பெரிய மாடாதிபதிகளாலும், பிற்காலத்தில் கர்நாடகாவில் வாழ்ந்த பசவேஷ்வராலும் வளர்த்தெடுக்கப்பட்டது. இது இலிங்காயதமதம், இலிங்காயதம், சக்தி விசிஷ்டாத்வைதம் என்றும் வழங்கப்படுகின்றது.வீர சைவர்கள் இலிங்கத்தைக் கழுத்திலே அணிபவர்கள். கையிலே வைத்துப் பூசிப்பார்கள். இஷ்டலிங்கத்தைத் தவிர வேறொன்றையும் வழிபடுவதில்லை என்னும் கொள்கை உடையவர்கள். விக்கிரக வழிபாட்டினையும் பலதெய்வ வணக்கத்தையும் கண்டிப்பதோடு கோயில் வழிபாட்டையும் இவர்கள் ஆதரிப்பதில்லை. பிராமணர்களின் மனுதர்ம கோட்பாடுகளுக்கு எதிரானது, சாதி வேறுபாடுகளற்ற சமுதாயம் உருவாக்கபட வேண்டும் என்பது இதன் கொள்கை. அதனால் இதன் கோட்பாடுகள் எளிய மக்களையும் எளிதில் சென்றடைந்தது. சைவப்பிரிவுகளில் வீரசைவம் எண்ணிக்கையிலும் மிகப்பெரியது. தமிழகத்தில் ஏற்பட்ட பக்திமார்க்கத்தின் தாக்கத...

வீரசைவம் வரலாறு

வீரசைவம் என்றால் என்ன ? வீரசைவர்கள் யார் ? வீரசைவதீன் சிறப்பு தன்மைகள் என்ன ? சைவம் என்றால் ஒளி, சைவம் என்றால் சிவம், சைவம் என்றால் சாந்தி வீரசைவம் என்ற வார்த்தையை பயன்படுத்திய உடனேயே இது எதாவது மற்ற மதங்களை தாக்குவதற்காக உருவாக்கப்பட்ட மதபிரிவோ என்று யாரும் எண்ண வேண்டாம். பொதுவாக சிவனை தவிர வேறு வேறு எவரையும் வீரசைவர்கள் வணங்க மாட்டார்கள். சிவாகமங்கள் தவிர வேறு எதையும் படிக்க மாட்டார்கள். சிவனடியாரை தவிர வேறு எவரையும் அடியார் என ஏற்று கொள்ள மாட்டார்கள். இதில் உறுதியாக இருப்பதினால் அந்த உறுதி நமது இதயத்தை வீரம் பொருந்தியதாக மாற்றி விட்டதினால் தான் நமது பண்டாரசமயத்திற்கு வீரசைவம் என்ற பெயர் வந்ததக பொதுவாக சொல்லப்படுகிறது. பல மொழியியல் வல்லுநர்கள் வீ என்ற முதல் எழுத்து சிவனை குறிப்பதாகவும் ர என்ற இரண்டாம் எழுத்த ஜீவனை குறிப்பதாகவும் விளக்கம் தருகிறார்கள். இதற்கு தத்துவார்த்த ரீதியில் வேறொரு பொருளும் சுட்டி காட்டப்படுகிறது. ஐந்து புலன்களை வெல்வதே நிஜமான வீரம் அப்படி புலன்களை வெல்லும் மார்கத்தை இந்த சைவமார்க்கம் எளிமையாக எடுத்து சொல்வதினால் வீர சைவம் என்ற பெயர் பெற்றதா...

சைவசித்தாந்த சுருக்கம்* *

சைவசித்தாந்த சுருக்கம்* *சைவம்* *1. சமயம் என்றால் என்ன?* மனிதன் வாழ்வை வழிப்படுத்துவது சமயம். *2. சைவம் என்றால் என்ன?* சைவம் என்றால் சிவ சம்பந்தமுடையது என்பது பொருள். *3. சைவ சமயம் எப்போது தோன்றியது?* சைவ சமயம் அநாதியானது. அநாதி என்றால் ஆதி அற்றது (தொடக்கமில் காலம் தொட்டு) என்பது பொருள். *4. யார் சைவர்?* சிவபெருமானை முழுமுதற் கடவுள் என உணர்ந்து வழிபடுபவரே சைவர். *5. சைவ சமயத்தின் முக்கிய நூல்கள் யாவை?* பதினான்கு சாத்திரங்களும், பன்னிரண்டு திருமுறைகளும். *6. சமயக் குரவர்கள் யாவர்?* 1. திருஞான சம்பந்த நாயனார் 2. திருநாவுக்கரசு நாயனார் 3. சுந்தரமூர்த்தி நாயனார் 4. மாணிக்கவாசகர் *7. அகச்சந்தானக் குரவர்கள் யாவர்?* 1. திருநந்தி தேவர் 2. சனற் குமாரமுனிவர் 3. சத்திய ஞான தரிசினிகள் 4. பரஞ்சோதி முனிகள் *8. புறச்சந்தானக் குரவர்கள் யாவர்?* 1. ஸ்ரீ மெய்கண்டதேவ நாயனார் 2. அருள்நந்தி சிவாச்சாரியார் 3. மறைஞான சம்பந்தர் சுவாமிகள் 4. உமாபதி சிவாச்சாரியார் *9. திருமுறை மற்றும் சாத்திரங்களின் அமைப்பு எவ்வாறு உள்ளது?* திருமுறைகள் சிவபெருமானின் பெருமைகளை விளக்கும் புகழ் நூல்களாக் அமைந்திருக்கின்றன. சாத்திர...

வீரசைவ பண்டாரம் தோற்றம்

பண்டாரம் அல்லது பண்டாரத்தார் என அழைக்கப் பெறுவோர் வீரசைவ குலத்தைச் சார்ந்தவர்களாவர்,,. ஆண்டிப் பண்டாரம், பண்டராம், ஜங்கம், யோகிஸ்வரர், லிங்காயத், வைராவிகள், புலவர், கன்னடியர், ஜங்கமர் போன்ற 19 உட்பிரிவைச் சார்ந்தவர்கள். பண்டாரம் சாதியினர் பெரும்பாலும் கோவில்களில் காவடி கட்டுதல், பூக்கட்டுதல் போன்றவற்றை செய்து வருகின்றனர். தற்பொழுது அனைத்து விதமான தொழில்களும் செய்கின்றனர். இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வரப்படாத கோயில்களில் பணிபுரிபவர்கள் தான் ஆண்டிப்பண்டாரங்கள். தோற்றம் வீரசைவ சமயத்தைக் கன்னடத்தில் 1125-1165 ஆண்டுகளில் வாழ்ந்த பசவண்ணர் தோற்றுவித்தார். இவர் கன்னட பிராமணர் குலத்தில் தோன்றியவர். 14 ஆம் நூற்றாண்டில் இது தமிழ்நாட்டில் பரவத் தொடங்கியது. 15 ஆம் நூற்றாண்டில் நவலிங்க லீலை முதலான சில நூல்கள் தமிழில் தோன்றின. பிற்காலத்தில் துறைமங்கலம் சிவப்பிரகாசர் இதனை வலுவாக்கினார்.வீரசைவபண்டாஇந்தியாவின் பழமையான‌ சிந்து சமவெளி நாகரீக (ஹராப்பா & மொகஞ்சதாரோ) காலத்திலே வீரசைவம் உண்டு என்பது வீரசைவ ஆய்வாளர் இரத்தின சபாபதி குறிப்பிடுகிறார். இந்த ஹராப்பா நாகரீக பகுதிகளில் பசுபதி (வீரச...

தமிழ்நாடு மாநிலபொறுப்பாளர்கள்

தமிழ்நாடு மாநிலபொறுப்பாளர்கள் பெயர் பதவி செல் நம்பர் S.நாகரத்தினம் தலைவர் 9944471818 பாலாஜி லோகநாதன் பொதுசெயலாளர் 9865178024 R. விவேகானந்தன் பொருளாளர் 9677082626

வீரசைவபண்டாரத்தார்

சுத்த சைவம், பூர்வ சைவம் , மார்க்க சைவம் ,ஆதி சைவம் , வீர சைவம் என சைவம் பல வகைப் பட்டு நின்ற கால கட்டத்தில் வீரசைவத்தின் கொள்கைகள் வசனகாரர்களைக் கவர்ந்தன. வீர சைவம் என்பது இட்ட லிங்கத்தை வழிபாடு செய்வதாகும்.குருவிடம் இருந்து பெற்றுக் கொண்ட லிங்கத்தை உடலின் மீது கட்டிக் கொள்வது இவர்கள் கொள்கையாகும்.இந்த லிங்கத்தை ஒரு போதும் இவர்கள் பிரிவதில்லை.மார்பில் சிவலிங்கத்தை அணிந்ததால் இவர்கள் “லிங்காயத் “என்றும் அழைக்கப்படுகின்றனர். [இன்றும் கூட கர்நாடகத்தில் ’லிங்காயத் ’ ஒரு பெரிய பிரிவாக வாழ்வது குறிப்பிடத் தக்கது ] உபதேசம் தருபவர் குருவாகவும்,அவர் அளிக்கும் சிவ அடையாளப் பொருள் லிங்கமாகவும் உள்ளது.அவர்கள் தாங்கள் அணிந் திருக்கும் லிங்கத்தை மட்டுமே வழிபடுகின்றனர்.இது முதியவர்களிடையே இன்றும் காணப்படுகிறது.வர்ணாசிரம முறையிலான சாதி வேறுபாடுகளை வீர சைவம் ஏற்கவில்லை. சிவ தீட்சை பெற்ற பிறகு அனைவரும் ஒன்றா கவே கருதப்பட்டனர். அறிவையும், தொழிலையும் பெரிதாகக் கருதாமல் பக்திக்கு வீர சைவர்கள் முதலிடம் தந்தனர். வீரசைவத்தினர் ’சரணர்” என்றும் அழைக்கப் பட்டனர்.சாதி ,பொருளாதார வேறபாடுகளின்மை, பெண்ணை மாயையாக வி...