வீர சைவம் இது இந்தியாவின் பல பகுதிகளில் தோன்றிய பழமையான தாந்த்ரீக வழிபாட்டு முறைகளை கொண்ட சைவ சமயத்தின் ஒரு பிரிவு ஆகும். வீரசைவம் ஆதிகாலங்கங்களலில் ரேணுகா சிவாச்சாரியார், தாருக சிவாச்சாரியார், யோகராம சிவாச்சாரியார்,பண்டிதரத்யா சிவாச்சாரியார், விஸ்வரத்ய சிவாச்சாரியார் போன்ற ஐந்து மிகப்பெரிய மாடாதிபதிகளாலும், பிற்காலத்தில் கர்நாடகாவில் வாழ்ந்த பசவேஷ்வராலும் வளர்த்தெடுக்கப்பட்டது. இது இலிங்காயதமதம், இலிங்காயதம், சக்தி விசிஷ்டாத்வைதம் என்றும் வழங்கப்படுகின்றது.வீர சைவர்கள் இலிங்கத்தைக் கழுத்திலே அணிபவர்கள். கையிலே வைத்துப் பூசிப்பார்கள். இஷ்டலிங்கத்தைத் தவிர வேறொன்றையும் வழிபடுவதில்லை என்னும் கொள்கை உடையவர்கள். விக்கிரக வழிபாட்டினையும் பலதெய்வ வணக்கத்தையும் கண்டிப்பதோடு கோயில் வழிபாட்டையும் இவர்கள் ஆதரிப்பதில்லை. பிராமணர்களின் மனுதர்ம கோட்பாடுகளுக்கு எதிரானது, சாதி வேறுபாடுகளற்ற சமுதாயம் உருவாக்கபட வேண்டும் என்பது இதன் கொள்கை. அதனால் இதன் கோட்பாடுகள் எளிய மக்களையும் எளிதில் சென்றடைந்தது. சைவப்பிரிவுகளில் வீரசைவம் எண்ணிக்கையிலும் மிகப்பெரியது. தமிழகத்தில் ஏற்பட்ட பக்திமார்க்கத்தின் தாக்கத்தால் கர்நாடகாவில் வீரசைவம் மிக அதிக எண்ணிக்கையில் பரவுவதற்க் காரணமாக இருந்தது. ஒவ்வொரு இலிங்காயதரும் ஏதோவொரு வீரசைவ மடத்தைச் சேர்ந்தவர்களாகவே இருப்பர். தமிழகம் தவிர்த்து இந்தியாவின் மற்ற பகுதிகயில் உள்ள சிவாலயங்களில் பெரும்பாலும் பிராமணர்கள் அல்லாத வீரசைவ/லிங்கயாத் மரபை சார்ந்தவர்களாலே பூஜை செய்யப்படுகிறது. முக்கியமாக இந்தியாவின் 12 ஜோதிர் லிங்கம்கள் வீரசைவ கோடபாடுகளிலே பூஜைகள் செய்யப்படுகிறது.
பண்டாரம் அல்லது பண்டாரத்தார் என அழைக்கப் பெறுவோர் வீரசைவ குலத்தைச் சார்ந்தவர்களாவர்,,. ஆண்டிப் பண்டாரம், பண்டராம், ஜங்கம், யோகிஸ்வரர், லிங்காயத், வைராவிகள், புலவர், கன்னடியர், ஜங்கமர் போன்ற 19 உட்பிரிவைச் சார்ந்தவர்கள். பண்டாரம் சாதியினர் பெரும்பாலும் கோவில்களில் காவடி கட்டுதல், பூக்கட்டுதல் போன்றவற்றை செய்து வருகின்றனர். தற்பொழுது அனைத்து விதமான தொழில்களும் செய்கின்றனர். இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வரப்படாத கோயில்களில் பணிபுரிபவர்கள் தான் ஆண்டிப்பண்டாரங்கள். தோற்றம் வீரசைவ சமயத்தைக் கன்னடத்தில் 1125-1165 ஆண்டுகளில் வாழ்ந்த பசவண்ணர் தோற்றுவித்தார். இவர் கன்னட பிராமணர் குலத்தில் தோன்றியவர். 14 ஆம் நூற்றாண்டில் இது தமிழ்நாட்டில் பரவத் தொடங்கியது. 15 ஆம் நூற்றாண்டில் நவலிங்க லீலை முதலான சில நூல்கள் தமிழில் தோன்றின. பிற்காலத்தில் துறைமங்கலம் சிவப்பிரகாசர் இதனை வலுவாக்கினார்.
கருத்துகள்
கருத்துரையிடுக