முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வீரசைவம் வரலாறு

வீரசைவம் என்றால் என்ன ?  வீரசைவர்கள் யார் ?  வீரசைவதீன் சிறப்பு தன்மைகள் என்ன ?   சைவம் என்றால் ஒளி,  சைவம் என்றால் சிவம்,  சைவம் என்றால் சாந்தி  வீரசைவம் என்ற வார்த்தையை பயன்படுத்திய உடனேயே இது எதாவது மற்ற மதங்களை தாக்குவதற்காக உருவாக்கப்பட்ட மதபிரிவோ என்று யாரும் எண்ண வேண்டாம்.    பொதுவாக சிவனை தவிர வேறு வேறு எவரையும் வீரசைவர்கள் வணங்க மாட்டார்கள்.  சிவாகமங்கள் தவிர வேறு எதையும் படிக்க மாட்டார்கள்.   சிவனடியாரை தவிர வேறு எவரையும் அடியார் என ஏற்று கொள்ள மாட்டார்கள்.  இதில் உறுதியாக இருப்பதினால் அந்த உறுதி நமது இதயத்தை வீரம் பொருந்தியதாக மாற்றி விட்டதினால் தான் நமது பண்டாரசமயத்திற்கு வீரசைவம் என்ற பெயர் வந்ததக பொதுவாக சொல்லப்படுகிறது. பல மொழியியல் வல்லுநர்கள் வீ என்ற முதல் எழுத்து சிவனை குறிப்பதாகவும் ர என்ற இரண்டாம் எழுத்த ஜீவனை குறிப்பதாகவும் விளக்கம் தருகிறார்கள்.  இதற்கு தத்துவார்த்த ரீதியில் வேறொரு பொருளும் சுட்டி காட்டப்படுகிறது. ஐந்து புலன்களை வெல்வதே நிஜமான வீரம் அப்படி புலன்களை வெல்லும் மார்கத்தை இந்த சை...

சிந்தாமணி வீரசைவ பேரவை

வீரசைவ பண்டாரத்தார்

 உலகமே உங்களை எதிர்த்தாலும்,  எல்லா சூழ்நிலையும்  நீங்கள்  தோத்துட்டீங்க தோத்துட்டீங்கன்னு உங்கள்  முன்னாடி நின்னு அலறினாலும்... நீங்களா ஒத்துக்குற வரைக்கும்... யாராலும்  எங்கேயும் எப்பவும் உங்களை ஜெயிக்க முடியாது  உற்சாகமாக செயல்படுங்கள்   👍🌻🌹 வெற்றிநிச்சயம் 👍👍👍👍👍👍👍👍  

வீரசைவபண்டாரத்தார்

வீர சைவன் மணியடிக்க சிவலிங்கம் தலையாட்டும் ஓம் நமசிவாய

சிந்தாமணி வீரசைவ பேரவை

சிந்தாமணி வீரசைவ பேரவை தலைவர்  மருதூர் வடக்கு வீர சைவப் பேரவை சமுதாய கட்டிடம் திறப்பு விழாவில் கலந்து கொண்ட போது

திருமணம் வாழ்த்து மடல்

                      திருமணம் வாழ்த்து மடல்                                                                                    வாழையடி வாழையாக வாழ்ந்திருக்கும் பந்தம் வாழ்வாங்கு வாழவேனும் நல்லா வாழ்த்தவேணும் சொந்தம் வாய்திறந்து வாழ்த்துப்பாடி வாசமலர் தூவ வந்தோம் வந்திருக்கும் வீரசைவர்களெல்லாம் நல்லாசிகளை தந்தோம்... பண்டாரத்தார் அனைவரும் பல்லாண்டு வாழ்த்து சொல்லனும் லிங்காயத்தார் அனைவரும் அத்தங்கங்களை வாழ்த்தனும் ஜங்கமர்கள் அனைவரும் ஓங்கார புகழ் பாடனும் வீரசைவர் அனைவரும் மணமக்களுக்கு வீரசைவ பண்புகளை சொல்லனும்... தேசிகர்கள் அனைவரும் திருவாசகங்களை சொல்லனும் குருக்கள் அனைவரும் திருமந்திரங்களை படிக்கனும் புலவர்கள் அனைவரும் பல கவிதைகளை பாடனும் பூசாரிகள் அனைவரும் புனித திருநீற்றை வழங்கனும்... தம்பிரான்கள் அனைவர...
வீரசைவபண்டாரத்தார் வலைதளம்.                  நாகை மாவட்டம் மருதூர் வடக்கு வீரசைவ பேரவை கிளையின் சமுதாய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது அதில் மாநில இணைச்செயலாளர் கனகசுந்தரம் அவர்கள் கொடியேற்றி சமுதாய கட்டிடத்தை திறந்து வைத்தார் மாவட்ட தலைவர் R விஸ்வநாதன் மகான் பசவர் திருஉருவ படத்தை திறந்து வைத்தார் இதில் மருதூர் வடக்கு கிராமத்தில் உள்ள  பண்டார குல சமூதாயம் மக்கள் அனைவரும் கலந்துகொண்டனர்
இந்து சிவபெருமானுடன்  சம்மந்தமான அனைத்தும்  சைவம்  என்று அறியப்பெறுகிறது. சைவநெறியென்றும், சிவநெறியென்றும், சிவ வழிபாடென்றும் சைவ சமயம் வழங்கப்பெறுகிறது. சிவவழிபாடு  தமிழர்களின் குறிஞ்சி நிலத்தெய்வமான  சேயோன்  வழிபாட்டிலிருந்து தோன்றியதாகும். ஆதி சைவம்,  வீர சைவம் , சித்தாந்த சைவம் என பல வகை பிரிவுகளை உள்ளடக்கிய இச்சமயம்,  இந்து  மதத்தின்  வைணவம் ,  சாக்தம் ,  கௌமாரம் ,  காணாபத்தியம்  முதலிய இந்து சமயப்பிரிவுகளையும் தன்னுள் இணைத்துக் கொண்டது.  கல்லாடம்  எனும் நூல் மூலம் முதல் தமிழ்ச்சிற்றிலக்கியத்தை தோற்றுவித்தது, பக்தி இலக்கிய காலத்தில்  நாயன்மார் ,  சமயக்குரவர்  போன்றோரின் எழுச்சியால் எண்ணற்ற சைவ இலக்கியத்தினை படைத்தது என்று சைவம் தமிழுக்கு ஆற்றிய தொண்டால் ' சைவத்தமிழ்'  என்று அழைக்கப்பெறுகிறது.
 வீர சைவம் இது இந்தியாவின் பல பகுதிகளில் தோன்றிய பழமையான தாந்த்ரீக வழிபாட்டு முறைகளை கொண்ட சைவ சமயத்தின் ஒரு பிரிவு ஆகும். வீரசைவம் ஆதிகாலங்கங்களலில் ரேணுகா சிவாச்சாரியார், தாருக சிவாச்சாரியார், யோகராம சிவாச்சாரியார்,பண்டிதரத்யா சிவாச்சாரியார், விஸ்வரத்ய சிவாச்சாரியார் போன்ற ஐந்து மிகப்பெரிய மாடாதிபதிகளாலும், பிற்காலத்தில் கர்நாடகாவில் வாழ்ந்த பசவேஷ்வராலும் வளர்த்தெடுக்கப்பட்டது. இது இலிங்காயதமதம், இலிங்காயதம், சக்தி விசிஷ்டாத்வைதம் என்றும் வழங்கப்படுகின்றது.வீர சைவர்கள் இலிங்கத்தைக் கழுத்திலே அணிபவர்கள். கையிலே வைத்துப் பூசிப்பார்கள். இஷ்டலிங்கத்தைத் தவிர வேறொன்றையும் வழிபடுவதில்லை என்னும் கொள்கை உடையவர்கள். விக்கிரக வழிபாட்டினையும் பலதெய்வ வணக்கத்தையும் கண்டிப்பதோடு கோயில் வழிபாட்டையும் இவர்கள் ஆதரிப்பதில்லை. பிராமணர்களின் மனுதர்ம கோட்பாடுகளுக்கு எதிரானது, சாதி வேறுபாடுகளற்ற சமுதாயம் உருவாக்கபட வேண்டும் என்பது இதன் கொள்கை. அதனால் இதன் கோட்பாடுகள் எளிய மக்களையும் எளிதில் சென்றடைந்தது. சைவப்பிரிவுகளில் வீரசைவம் எண்ணிக்கையிலும் மிகப்பெரியது. தமிழகத்தில் ஏற்பட்ட பக்திமார்க்கத்தின் தா...
வீரசைவபண்டாரத்தார்

வீரசைவபண்டாரத்தார்

சுத்த சைவம், பூர்வ சைவம் , மார்க்க சைவம் ,ஆதி சைவம் , வீர சைவம் என சைவம் பல வகைப் பட்டு நின்ற கால கட்டத்தில் வீரசைவத்தின் கொள்கைகள் வசனகாரர்களைக் கவர்ந்தன. வீர சைவம் என்பது இட்ட லிங்கத்தை வழிபாடு செய்வதாகும்.குருவிடம் இருந்து பெற்றுக் கொண்ட லிங்கத்தை உடலின் மீது கட்டிக் கொள்வது இவர்கள் கொள்கையாகும்.இந்த லிங்கத்தை ஒரு போதும் இவர்கள் பிரிவதில்லை.மார்பில் சிவலிங்கத்தை அணிந்ததால் இவர்கள் “லிங்காயத் “என்றும் அழைக்கப்படுகின்றனர். [இன்றும் கூட கர்நாடகத்தில் ’லிங்காயத் ’ ஒரு பெரிய பிரிவாக வாழ்வது குறிப்பிடத் தக்கது ] உபதேசம் தருபவர் குருவாகவும்,அவர் அளிக்கும் சிவ அடையாளப் பொருள் லிங்கமாகவும் உள்ளது.அவர்கள் தாங்கள் அணிந் திருக்கும் லிங்கத்தை மட்டுமே வழிபடுகின்றனர்.இது முதியவர்களிடையே இன்றும் காணப்படுகிறது.வர்ணாசிரம முறையிலான சாதி வேறுபாடுகளை வீர சைவம் ஏற்கவில்லை. சிவ தீட்சை பெற்ற பிறகு அனைவரும் ஒன்றா கவே கருதப்பட்டனர். அறிவையும், தொழிலையும் பெரிதாகக் கருதாமல் பக்திக்கு வீர சைவர்கள் முதலிடம் தந்தனர். வீரசைவத்தினர் ’சரணர்” என்றும் அழைக்கப் பட்டனர்.சாதி ,பொருளாதார வேறபாடுகளின்மை, பெண்ணை மாயையாக வி...
சைவக் கடவுள்களான சிவன், முருகன் மற்றும் சக்தி ஆகியவற்றை முதன்மை கடவுள்களாக கொண்டு வாழும் திராவிட இனத்தின் மூத்தகுடிகள் ஆவர். சங்ககாலந்தொட்டே சைவத்தையைம் தமிழையும் வளர்ப்பதில் அரும்பாடுபட்டவர்கள். இவர்களில் சில பிரிவினர் சமண மதத்தையும் கடைபிடித்தவர்களாக சொல்லப்படுகிறது. மிகப்பெரிய எண்ணிக்கையுடைய பல பிரிவுகளை கொண்ட அமைப்பாக இருந்தது. இவர்கள் வேளாளர் பிரிவின் வகையை சார்ந்தவர்களும் ஆவர். தற்போது பல பிரிவினர் தங்களை பண்டாரங்களாகவும், சோழிய வேளார்களாகவும், சைவ வேளாளர்களாகவும் தங்களை இணைத்துக்கொண்டனர். மன்னராட்சி காலங்களில் பண்டாரம் என்பது பல பிரிவினர்க்கு மிக உயந்த பட்டமாகவும் கொடுக்கப்பட்டது. இவை காலபோக்கில் பல ஆட்சி மாற்றங்களினாலும், சமுதாய மாற்றங்களினாலும் பல வீழ்ச்சிகளை சந்தித்து, தற்போது 18 பிரிவினர்களாக அருகிவிட்டது. தமிழக வீரசைவம் குல பிரிவுகள். 1.ஆண்டிபண்டாரம் 2.அய்யர் 3.ஐயா 4.தேசிகர் 5.குருக்கள் 6.ஜங்கம் 7.ஜோஹி 8.கன்னடியர் 9. லிங்காயத் 10.மூர்த்தி 11.ஓதுவர் 12.பண்டாரம் 13.பூசாரி 14.புலவர் 15.சிவாச்சார்யா 16.தம்பிரார் 17.வீரசைவர் 18.யோகீஸ்வரர் மேலும் பிற மாநிலங்களில் வாழ்ந்த சில தமிழ...
வீரசைவ பண்டாரத்தார் பண்டாரம்  அல்லது  பண்டாரத்தார்  என அழைக்கப் பெறுவோர்  வீரசைவ  குலத்தைச் சார்ந்தவர்களாவர்,,. ஆண்டிப் பண்டாரம், பண்டராம், ஜங்கம், யோகிஸ்வரர், லிங்காயத், வைராவிகள், புலவர், கன்னடியர், ஜங்கமர் போன்ற 19 உட்பிரிவைச் சார்ந்தவர்கள். பண்டாரம்  சாதியினர்  பெரும்பாலும்  கோவில்களில்  காவடி கட்டுதல், பூக்கட்டுதல் போன்றவற்றை செய்து வருகின்றனர். தற்பொழுது அனைத்து விதமான தொழில்களும் செய்கின்றனர்.  இந்து  சமய அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வரப்படாத கோயில்களில் பணிபுரிபவர்கள் தான் ஆண்டிப்பண்டாரங்கள். வரலாறு 9 ஆம் நூற்றாண்டில் ராஜராஜன் காலகட்டத்தில் சைவக் கோயில்கள் ஆகம வழிபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன. அந்த ஆகமங்கள் ’அர்ச்ச’ முறை கொண்டவை. அதாவது 16 வழிபாடுகள் மூலம் சிவனை வழிபடுபவை. ஆனால் இவற்றுக்கு வெளியேயும் பல வழிபாட்டுமுறைகள் இருந்தன. அவை தாந்த்ரீக (குறியீட்டுச் சடங்குகள் கொண்ட) வழிபாட்டு முறையை பின்பற்றியவை. அவற்றை பக்தி இயக்கம் வெறுத்து ஒதுக்கவே அவை இரகசியச் சடங்குகளாயின. தாந்த்ரீகக் கல்வி அளிக்கும் கல்விச்சாலைகளை ராஜராஜன் அழி...