வீர சைவம் இது இந்தியாவின் பல பகுதிகளில் தோன்றிய பழமையான தாந்த்ரீக வழிபாட்டு முறைகளை கொண்ட சைவ சமயத்தின் ஒரு பிரிவு ஆகும். வீரசைவம் ஆதிகாலங்கங்களலில் ரேணுகா சிவாச்சாரியார், தாருக சிவாச்சாரியார், யோகராம சிவாச்சாரியார்,பண்டிதரத்யா சிவாச்சாரியார், விஸ்வரத்ய சிவாச்சாரியார் போன்ற ஐந்து மிகப்பெரிய மாடாதிபதிகளாலும், பிற்காலத்தில் கர்நாடகாவில் வாழ்ந்த பசவேஷ்வராலும் வளர்த்தெடுக்கப்பட்டது. இது இலிங்காயதமதம், இலிங்காயதம், சக்தி விசிஷ்டாத்வைதம் என்றும் வழங்கப்படுகின்றது.வீர சைவர்கள் இலிங்கத்தைக் கழுத்திலே அணிபவர்கள். கையிலே வைத்துப் பூசிப்பார்கள். இஷ்டலிங்கத்தைத் தவிர வேறொன்றையும் வழிபடுவதில்லை என்னும் கொள்கை உடையவர்கள். விக்கிரக வழிபாட்டினையும் பலதெய்வ வணக்கத்தையும் கண்டிப்பதோடு கோயில் வழிபாட்டையும் இவர்கள் ஆதரிப்பதில்லை. பிராமணர்களின் மனுதர்ம கோட்பாடுகளுக்கு எதிரானது, சாதி வேறுபாடுகளற்ற சமுதாயம் உருவாக்கபட வேண்டும் என்பது இதன் கொள்கை. அதனால் இதன் கோட்பாடுகள் எளிய மக்களையும் எளிதில் சென்றடைந்தது. சைவப்பிரிவுகளில் வீரசைவம் எண்ணிக்கையிலும் மிகப்பெரியது. தமிழகத்தில் ஏற்பட்ட பக்திமார்க்கத்தின் தாக்கத...
தமிழ்நாடு மாநில வீரசைவ பேரவை