சித்தகங்காமடாதிபதி #சிவக்குமாரசுவாமிக்கு வயது 111 ... கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து 63 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது தும்கூர். அதிக அளவில் கல்வி ஸ்தாபனங்களையும் அதே அளவிற்கு கல்வி அறிவு பெற்றவர்களையும் பெற்ற மாவட்டமாக இந்த தும்கூர் விளங்குகிறது என்றால் அதற்கு முக்கியமான காரணமானமாக ஒருவரை நோக்கி கையைக்காட்டுகிறார்கள். அவர்தான் #சிவக்குமாரசுவாமி. ஏப்ரல் ஒன்னாந்தேதி இவரது 111வது பிறந்த நாள் ஊர் மக்களால் மிகக்குது கலமாக கொண்டாடப்பட்டது, அதற்கு முன் சிவக்குமாரசுவாமி பற்றி ஒரு சிறிய அறிமுகம். மகாடி தலுக்கா வீராபுரா கிராமத்தில் சிவண்ணாவாக பிறந்து வளர்ந்தவர், அடிக்கடி சித்தகங்கா மடத்திற்கு வந்து இங்குள்ள சிவனை வழிபடுவதும் இங்கிருந்த மடாதிபதியை சந்தித்து ஆசிபெற்று செல்வதும் இவரது வழக்கம். சிறுவயது முதலே கல்வி கற்பதில் நாட்டம் அதிகம் அவரது ஊரில் ஆரம்பபள்ளிக்கு மேல் படிக்கமுடியாது என்றால் அடுத்த ஊருக்கு சென்று படிப்பார் இப்படியே கல்லுரி படிப்பை முடிப்பதற்காக பெங்களூரு வரை சென்றவர். இவர் சார்ந்த ஊரின் மொத்த சுற்று வட்டாரத்திலேயே அந்தக்காலத்தில் அதிகம் படித்தவர் இவர்தான்.இந்த நில...