முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சித்தகங்காமடாதிபதி

சித்தகங்காமடாதிபதி #சிவக்குமாரசுவாமிக்கு வயது 111 ...

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து 63 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது தும்கூர்.

அதிக அளவில் கல்வி ஸ்தாபனங்களையும் அதே அளவிற்கு கல்வி அறிவு பெற்றவர்களையும் பெற்ற மாவட்டமாக இந்த தும்கூர் விளங்குகிறது என்றால் அதற்கு முக்கியமான காரணமானமாக ஒருவரை நோக்கி கையைக்காட்டுகிறார்கள்.

அவர்தான் #சிவக்குமாரசுவாமி.

ஏப்ரல் ஒன்னாந்தேதி இவரது 111வது பிறந்த நாள் ஊர் மக்களால் மிகக்குது கலமாக கொண்டாடப்பட்டது,  

அதற்கு முன் சிவக்குமாரசுவாமி பற்றி ஒரு சிறிய அறிமுகம்.

மகாடி தலுக்கா வீராபுரா கிராமத்தில் சிவண்ணாவாக பிறந்து வளர்ந்தவர், அடிக்கடி சித்தகங்கா மடத்திற்கு வந்து இங்குள்ள சிவனை வழிபடுவதும் இங்கிருந்த மடாதிபதியை சந்தித்து ஆசிபெற்று செல்வதும் இவரது வழக்கம்.

சிறுவயது முதலே கல்வி கற்பதில் நாட்டம் அதிகம் அவரது ஊரில் ஆரம்பபள்ளிக்கு மேல் படிக்கமுடியாது என்றால் அடுத்த ஊருக்கு சென்று படிப்பார் இப்படியே கல்லுரி படிப்பை முடிப்பதற்காக பெங்களூரு வரை சென்றவர்.

இவர் சார்ந்த ஊரின் மொத்த சுற்று வட்டாரத்திலேயே அந்தக்காலத்தில் அதிகம் படித்தவர் இவர்தான்.இந்த நிலையில் இவரது 22 வது வயதில் எதிர்பாரத சூழ்நிலையில் சித்தகங்கா மடத்தின் பொறுப்பை ஏற்கும் சூழல் வந்தது.

பொறுப்பிற்கு வந்த நாள் முதல் ஏழை எளிய மக்களுக்கு தடையில்லாத கல்வியை வழங்குவதையே லட்சியமாகக்கொண்டு செயல்பட்டார் இன்னமும் செயல்பட்டு வருகிறார்.

இன்றைய தேதிக்கு ஒன்பதாயிரம் மாணவர்கள் இங்கு குருகுல முறையில் கல்வி கற்றுவருகின்றனர்.ஆரம்பபள்ளி கல்வி முதல் உயர்நிலைக்கல்வி வரை எவ்வளவு படித்தாலும் ஒரு பைசா செலவு கிடையாது, உணவும் உடையும் முற்றிலும் இலவசம்.

இங்கே படித்து பெரிய பெரிய பதவியிலும் பொறுப்பிலும் இருக்கும் மாணவர்கள் வாரி வழங்கும் நன்கொடையால் கிட்டத்தட்ட 124 கல்வி நிலையங்கள் தும்கூருவைச்சுற்றி இயங்கிவருகின்றன.

ஆசிரியர் கல்வி நிலையம், சமஸ்கிருத பண்டிதராக்கும் கல்வி மையம் மற்றும் பார்வையற்றவர்களுக்கான பல்நோக்கு கல்வி நிலையம் வரை பல்வேறு கல்வி நிலையங்கள் பரந்து விரிந்து காணப்படுகிறது.

இவரை பார்க்க யார் வந்தாலும் சரி அல்லது இவர் யாரைப்போய் பார்த்தாலும் சரி ஏழைப்பிள்ளைகள் படிக்க உங்களால் முடிந்தளவு உதவுங்கள் என்றே கேட்டுக்கொள்வார். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் முதல் இந்நாள் பிரதமர் மோடி வரை இவரை சந்தித்து ஆசிபெற்றவர்கள் அதிகம்.

கர்நாடகமாநிலத்தில் உயர்விருதான கர்நாடகா ரத்தினம் விருது உள்ளீட்ட பல்வேறு விருதுகள் வழங்கி இவர் கவுரவிக்கப்பட்டிருக்கிறார், தும்கூர் மக்கள் இவரை நடமாடும் கடவுளாக போற்றுகின்றனர்.

வருடத்திற்கு ஒரு முறை விவசாயிகளுக்காக மாபெரும் கண்காட்சி நடத்தி விவசாய புரட்சி ஏற்படுத்தி வருகிறார். சித்தகங்கா மடத்து கோவில்களையும் திருவிழாக்களையும் புணருத்தனம் செய்து அதிக மக்கள் வந்து செல்லும்படியாக செய்துள்ளார், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கம்ப்யூட்டர் மூலமாக சித்தகங்கா மடத்தை பற்றி பலரும் அறியச்செய்து வருகிறார். யாரை பார்த்தாலும் சாப்பிட்டிங்களா என்று இவரும் கேட்கிறார் இங்குள்ளவர்களும் கேட்கிறார்கள் அந்த அளவிற்கு அணையா நெருப்புடன் அன்னதானம் நடந்து கொண்டே இருக்கிறது.

அதிகாலை 2:30 மணிக்கு இவரது அலுவல் ஆரம்பமாகிவிடும் குளித்து முடித்து பூஜையில் உட்கார்ந்தால் 5:30 மணிக்கு முடிக்கிறார் பின்னர் அவரே கைப்பட எழுதி பராமரித்துவரும் டைரி மற்றும் அன்றைய அலுவல்களை சந்திப்புகளை சரிபார்த்துக்கொள்கிறார் பிறகு தன்னை சந்திக்க காத்திருக்கும் மக்களை சந்தித்து பேசுகிறார், நேரந்தவறாமல் இது போல அன்றைய பல வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு இரவு துாங்கப்போகும் போது மணி 12 மணியாகிவிடும். சிறிதளவே துாக்கம் அதைவிட சிறிதளவே சிறுதானிய உணவு.

அன்றாடம் மாலை 6 மணிக்கு நடக்கும் மாணவர்களுக்கான பிரார்த்தனை கூட்டத்திற்கு உதவியாளர்கள் துணையின்றி ஆனால் உதவியாளர்களுடன் விறுவிறுவென நடந்துவந்தார். வயது மூப்பின் காரணமாக தலைமட்டும் கொஞ்சம் தளர்ந்து தொங்கியபடி இருக்கிறதே தவிர நடையிலும் உடலிலும் தளர்வில்லை.

நீண்ட வரிசையில் சென்று மக்கள் அவரை சந்தித்து பல விஷயங்களை சொல்கின்றனர் சில விஷயங்களுக்கு பதில் சொல்கிறார் பல விஷயங்களை கேட்டுக்கொள்கிறார் என்னை அறிமுகப்படுத்தியதும் ஆசீர்வாதித்தவர் இங்கு நடப்பது எதுவும் என் செயலல்ல எல்லாம் ஈசன் செயல் என்று கூறி புன்னகைப்பார் ஐயா அவர்கள் #சிவலோகபதவிஅடைந்துவிட்டார் என்பதை வருத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வீரசைவ பண்டாரம் தோற்றம்

பண்டாரம் அல்லது பண்டாரத்தார் என அழைக்கப் பெறுவோர் வீரசைவ குலத்தைச் சார்ந்தவர்களாவர்,,. ஆண்டிப் பண்டாரம், பண்டராம், ஜங்கம், யோகிஸ்வரர், லிங்காயத், வைராவிகள், புலவர், கன்னடியர், ஜங்கமர் போன்ற 19 உட்பிரிவைச் சார்ந்தவர்கள். பண்டாரம் சாதியினர் பெரும்பாலும் கோவில்களில் காவடி கட்டுதல், பூக்கட்டுதல் போன்றவற்றை செய்து வருகின்றனர். தற்பொழுது அனைத்து விதமான தொழில்களும் செய்கின்றனர். இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வரப்படாத கோயில்களில் பணிபுரிபவர்கள் தான் ஆண்டிப்பண்டாரங்கள். தோற்றம் வீரசைவ சமயத்தைக் கன்னடத்தில் 1125-1165 ஆண்டுகளில் வாழ்ந்த பசவண்ணர் தோற்றுவித்தார். இவர் கன்னட பிராமணர் குலத்தில் தோன்றியவர். 14 ஆம் நூற்றாண்டில் இது தமிழ்நாட்டில் பரவத் தொடங்கியது. 15 ஆம் நூற்றாண்டில் நவலிங்க லீலை முதலான சில நூல்கள் தமிழில் தோன்றின. பிற்காலத்தில் துறைமங்கலம் சிவப்பிரகாசர் இதனை வலுவாக்கினார்.
சைவக் கடவுள்களான சிவன், முருகன் மற்றும் சக்தி ஆகியவற்றை முதன்மை கடவுள்களாக கொண்டு வாழும் திராவிட இனத்தின் மூத்தகுடிகள் ஆவர். சங்ககாலந்தொட்டே சைவத்தையைம் தமிழையும் வளர்ப்பதில் அரும்பாடுபட்டவர்கள். இவர்களில் சில பிரிவினர் சமண மதத்தையும் கடைபிடித்தவர்களாக சொல்லப்படுகிறது. மிகப்பெரிய எண்ணிக்கையுடைய பல பிரிவுகளை கொண்ட அமைப்பாக இருந்தது. இவர்கள் வேளாளர் பிரிவின் வகையை சார்ந்தவர்களும் ஆவர். தற்போது பல பிரிவினர் தங்களை பண்டாரங்களாகவும், சோழிய வேளார்களாகவும், சைவ வேளாளர்களாகவும் தங்களை இணைத்துக்கொண்டனர். மன்னராட்சி காலங்களில் பண்டாரம் என்பது பல பிரிவினர்க்கு மிக உயந்த பட்டமாகவும் கொடுக்கப்பட்டது. இவை காலபோக்கில் பல ஆட்சி மாற்றங்களினாலும், சமுதாய மாற்றங்களினாலும் பல வீழ்ச்சிகளை சந்தித்து, தற்போது 18 பிரிவினர்களாக அருகிவிட்டது. தமிழக வீரசைவம் குல பிரிவுகள். 1.ஆண்டிபண்டாரம் 2.அய்யர் 3.ஐயா 4.தேசிகர் 5.குருக்கள் 6.ஜங்கம் 7.ஜோஹி 8.கன்னடியர் 9. லிங்காயத் 10.மூர்த்தி 11.ஓதுவர் 12.பண்டாரம் 13.பூசாரி 14.புலவர் 15.சிவாச்சார்யா 16.தம்பிரார் 17.வீரசைவர் 18.யோகீஸ்வரர் மேலும் பிற மாநிலங்களில் வாழ்ந்த சில தமிழ...

வீரசைவம் வரலாறு

வீரசைவம் என்றால் என்ன ?  வீரசைவர்கள் யார் ?  வீரசைவதீன் சிறப்பு தன்மைகள் என்ன ?   சைவம் என்றால் ஒளி,  சைவம் என்றால் சிவம்,  சைவம் என்றால் சாந்தி  வீரசைவம் என்ற வார்த்தையை பயன்படுத்திய உடனேயே இது எதாவது மற்ற மதங்களை தாக்குவதற்காக உருவாக்கப்பட்ட மதபிரிவோ என்று யாரும் எண்ண வேண்டாம்.    பொதுவாக சிவனை தவிர வேறு வேறு எவரையும் வீரசைவர்கள் வணங்க மாட்டார்கள்.  சிவாகமங்கள் தவிர வேறு எதையும் படிக்க மாட்டார்கள்.   சிவனடியாரை தவிர வேறு எவரையும் அடியார் என ஏற்று கொள்ள மாட்டார்கள்.  இதில் உறுதியாக இருப்பதினால் அந்த உறுதி நமது இதயத்தை வீரம் பொருந்தியதாக மாற்றி விட்டதினால் தான் நமது பண்டாரசமயத்திற்கு வீரசைவம் என்ற பெயர் வந்ததக பொதுவாக சொல்லப்படுகிறது. பல மொழியியல் வல்லுநர்கள் வீ என்ற முதல் எழுத்து சிவனை குறிப்பதாகவும் ர என்ற இரண்டாம் எழுத்த ஜீவனை குறிப்பதாகவும் விளக்கம் தருகிறார்கள்.  இதற்கு தத்துவார்த்த ரீதியில் வேறொரு பொருளும் சுட்டி காட்டப்படுகிறது. ஐந்து புலன்களை வெல்வதே நிஜமான வீரம் அப்படி புலன்களை வெல்லும் மார்கத்தை இந்த சை...