முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வீரசைவ பண்டாரம் தோற்றம்

பண்டாரம் அல்லது பண்டாரத்தார் என அழைக்கப் பெறுவோர் வீரசைவ குலத்தைச் சார்ந்தவர்களாவர்,,. ஆண்டிப் பண்டாரம், பண்டராம், ஜங்கம், யோகிஸ்வரர், லிங்காயத், வைராவிகள், புலவர், கன்னடியர், ஜங்கமர் போன்ற 19 உட்பிரிவைச் சார்ந்தவர்கள். பண்டாரம் சாதியினர் பெரும்பாலும் கோவில்களில் காவடி கட்டுதல், பூக்கட்டுதல் போன்றவற்றை செய்து வருகின்றனர். தற்பொழுது அனைத்து விதமான தொழில்களும் செய்கின்றனர். இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வரப்படாத கோயில்களில் பணிபுரிபவர்கள் தான் ஆண்டிப்பண்டாரங்கள்.

தோற்றம்


வீரசைவ சமயத்தைக் கன்னடத்தில் 1125-1165 ஆண்டுகளில் வாழ்ந்த பசவண்ணர் தோற்றுவித்தார். இவர் கன்னட பிராமணர் குலத்தில் தோன்றியவர். 14 ஆம் நூற்றாண்டில் இது தமிழ்நாட்டில் பரவத் தொடங்கியது. 15 ஆம் நூற்றாண்டில் நவலிங்க லீலை முதலான சில நூல்கள் தமிழில் தோன்றின. பிற்காலத்தில் துறைமங்கலம் சிவப்பிரகாசர் இதனை வலுவாக்கினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சைவக் கடவுள்களான சிவன், முருகன் மற்றும் சக்தி ஆகியவற்றை முதன்மை கடவுள்களாக கொண்டு வாழும் திராவிட இனத்தின் மூத்தகுடிகள் ஆவர். சங்ககாலந்தொட்டே சைவத்தையைம் தமிழையும் வளர்ப்பதில் அரும்பாடுபட்டவர்கள். இவர்களில் சில பிரிவினர் சமண மதத்தையும் கடைபிடித்தவர்களாக சொல்லப்படுகிறது. மிகப்பெரிய எண்ணிக்கையுடைய பல பிரிவுகளை கொண்ட அமைப்பாக இருந்தது. இவர்கள் வேளாளர் பிரிவின் வகையை சார்ந்தவர்களும் ஆவர். தற்போது பல பிரிவினர் தங்களை பண்டாரங்களாகவும், சோழிய வேளார்களாகவும், சைவ வேளாளர்களாகவும் தங்களை இணைத்துக்கொண்டனர். மன்னராட்சி காலங்களில் பண்டாரம் என்பது பல பிரிவினர்க்கு மிக உயந்த பட்டமாகவும் கொடுக்கப்பட்டது. இவை காலபோக்கில் பல ஆட்சி மாற்றங்களினாலும், சமுதாய மாற்றங்களினாலும் பல வீழ்ச்சிகளை சந்தித்து, தற்போது 18 பிரிவினர்களாக அருகிவிட்டது. தமிழக வீரசைவம் குல பிரிவுகள். 1.ஆண்டிபண்டாரம் 2.அய்யர் 3.ஐயா 4.தேசிகர் 5.குருக்கள் 6.ஜங்கம் 7.ஜோஹி 8.கன்னடியர் 9. லிங்காயத் 10.மூர்த்தி 11.ஓதுவர் 12.பண்டாரம் 13.பூசாரி 14.புலவர் 15.சிவாச்சார்யா 16.தம்பிரார் 17.வீரசைவர் 18.யோகீஸ்வரர் மேலும் பிற மாநிலங்களில் வாழ்ந்த சில தமிழ...

வீரசைவம் வரலாறு

வீரசைவம் என்றால் என்ன ?  வீரசைவர்கள் யார் ?  வீரசைவதீன் சிறப்பு தன்மைகள் என்ன ?   சைவம் என்றால் ஒளி,  சைவம் என்றால் சிவம்,  சைவம் என்றால் சாந்தி  வீரசைவம் என்ற வார்த்தையை பயன்படுத்திய உடனேயே இது எதாவது மற்ற மதங்களை தாக்குவதற்காக உருவாக்கப்பட்ட மதபிரிவோ என்று யாரும் எண்ண வேண்டாம்.    பொதுவாக சிவனை தவிர வேறு வேறு எவரையும் வீரசைவர்கள் வணங்க மாட்டார்கள்.  சிவாகமங்கள் தவிர வேறு எதையும் படிக்க மாட்டார்கள்.   சிவனடியாரை தவிர வேறு எவரையும் அடியார் என ஏற்று கொள்ள மாட்டார்கள்.  இதில் உறுதியாக இருப்பதினால் அந்த உறுதி நமது இதயத்தை வீரம் பொருந்தியதாக மாற்றி விட்டதினால் தான் நமது பண்டாரசமயத்திற்கு வீரசைவம் என்ற பெயர் வந்ததக பொதுவாக சொல்லப்படுகிறது. பல மொழியியல் வல்லுநர்கள் வீ என்ற முதல் எழுத்து சிவனை குறிப்பதாகவும் ர என்ற இரண்டாம் எழுத்த ஜீவனை குறிப்பதாகவும் விளக்கம் தருகிறார்கள்.  இதற்கு தத்துவார்த்த ரீதியில் வேறொரு பொருளும் சுட்டி காட்டப்படுகிறது. ஐந்து புலன்களை வெல்வதே நிஜமான வீரம் அப்படி புலன்களை வெல்லும் மார்கத்தை இந்த சை...