முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்
சைவக் கடவுள்களான சிவன், முருகன் மற்றும் சக்தி ஆகியவற்றை முதன்மை கடவுள்களாக கொண்டு வாழும் திராவிட இனத்தின் மூத்தகுடிகள் ஆவர்.
சங்ககாலந்தொட்டே சைவத்தையைம் தமிழையும் வளர்ப்பதில் அரும்பாடுபட்டவர்கள். இவர்களில் சில பிரிவினர் சமண மதத்தையும் கடைபிடித்தவர்களாக சொல்லப்படுகிறது.
மிகப்பெரிய எண்ணிக்கையுடைய பல பிரிவுகளை கொண்ட அமைப்பாக இருந்தது. இவர்கள் வேளாளர் பிரிவின் வகையை சார்ந்தவர்களும் ஆவர். தற்போது பல பிரிவினர் தங்களை பண்டாரங்களாகவும், சோழிய வேளார்களாகவும், சைவ வேளாளர்களாகவும் தங்களை இணைத்துக்கொண்டனர்.
மன்னராட்சி காலங்களில் பண்டாரம் என்பது பல பிரிவினர்க்கு மிக உயந்த பட்டமாகவும் கொடுக்கப்பட்டது. இவை காலபோக்கில் பல ஆட்சி மாற்றங்களினாலும், சமுதாய மாற்றங்களினாலும் பல வீழ்ச்சிகளை சந்தித்து, தற்போது 18 பிரிவினர்களாக அருகிவிட்டது.
தமிழக வீரசைவம் குல பிரிவுகள்.
1.ஆண்டிபண்டாரம்
2.அய்யர்
3.ஐயா
4.தேசிகர்
5.குருக்கள்
6.ஜங்கம்
7.ஜோஹி
8.கன்னடியர்
9. லிங்காயத்
10.மூர்த்தி
11.ஓதுவர்
12.பண்டாரம்
13.பூசாரி
14.புலவர்
15.சிவாச்சார்யா
16.தம்பிரார்
17.வீரசைவர்
18.யோகீஸ்வரர்
மேலும் பிற மாநிலங்களில் வாழ்ந்த சில தமிழ் வீரசைவர் பிரிவுகள்.
19.பண்டாரியா
20.பண்டாரா
21.பாப்பட செட்டிமார்
22.அருபத்திநான்கு மிராசு பண்டாரம்
23.பாண்டி
24.பாண்டவா
25.பூசாரி
26.ஆண்டி
27.வீரசைவ தண்டரான்.
28.வைராகி
29.வைராவிகள்
30.பமேரியா
இந்த வீரசைவ பண்டாரம் பிரிவினர் சுமார் 6 திராவிட மொழிகளை தாய்மொழிகளாக கொண்டு வாழ்ந்தனர்.
1. தமிழ்
2. கன்னடம்
3. மலையாளம்
4. தெலுங்கு
5. கொங்கான்
6. பலுசிஸ்தான் (உருது).
வீரசைவர்களின் குலத்தொழில்கள்
1.பேரரசர்கள் {இலங்கையின் யாழ்பானம் மற்றும் கண்டி பகுதிகள், கர்நாடக விஜயநகர பேரரசுகள் மற்றும் பிற்கால சோழர்கள்(உறுதிசெய்யப்படவில்லை)}
2. நில உடமையாளர் / நிலபிரபுக்கள் (தமிழகத்தின் சில ஜமீன்கள், பாளையக்காரர்கள்)
3. ஆதினங்கள் / மாடாதிபதிகள் (சைவ / வீரசைவ மடங்கள்)
4. பண்டாரங்கள் (பேரரசர்களின் கருவூலங்களை / பொக்கிசங்களை பாதுகாத்தல்)
5. தம்பிரான்கள் (மடங்கள் / கோவில்களை நிர்வகிப்பவர்)
6. குருக்கள் / பூசாரிகள் (சைவ ஆலயங்கள்)
8. புலவர்கள்
9. ஓதுவார்கள். (சிவாலயங்களில் தேவாரம் திருவாசகம் பாடுதல்)
10. வைராகி / வைராவிகள் (நெல், சோளம் போன்ற தானியங்களை அளத்தல், தான்ய பண்டாரங்கள்)
11. வாணிபம்(பாப்பட செட்டிமார், பூப்பண்டாரங்கள்)
7. சிவனடியார்கள் (சன்யாசம் மேற்கொள்ளுதல்)
வீரசைவர்களின் சாதனைகள்
1. சைவத்தையைம் தமிழையும் வளர்த்தில் முக்கிய பங்கை உடையவர்கள்.
2. சைவ சித்தாந்தம், வீரசைவம் என்னும் மிகப்பபெரிய எண்ணிக்கையுடைய சைவ சமய பிரிவுகளை நிறுவியவர்கள்.
3. பண்டார சாத்திரம் , மெய்கண்டார் சாத்திரம் போன்ற எண்ணற்ற சைவ பக்தி இலக்கியங்களை இயற்றியவர்கள்.
4. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவரும் 18க்கும் மேற்பட்ட சைவ மடங்களை இன்றுவரை ஆதினங்களாக இருந்து இயக்கிவருபவர்கள்.
5. தாந்திரீகம் மற்றும் ஆகம வழிபாட்டு முறைகளில் நன்கு தேற்ச்சி பெற்று, பல சைவ ஆலயங்களை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நிர்வகித்து வருபவர்கள்.
6. சைவ ஆலயங்களின் பூஜை தொழில்கள் செய்யும் பூசாரிகள் மற்றும் குருக்கள் உள்ளனர்.
7. சிவாலயங்களில் தேவாரம் திருவாசகம் பாடும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
8. சன்னியாசம் மேற்கொண்டு சிவ தொண்டை முதல் கடமைகளாக செய்வதில் பெரும்பாலனவர்கள் வீரசைவ குலத்தவர்களே ஆவர்.
9. சங்க காலத்திலிருந்து பலர் புலவர்களாக இருந்துள்ளனர்.
10. மன்னர் ஆட்சி காலங்களில் வீரசைவத்தின் ஒரு பிரிவினர் போர் தொழில் செய்யும் சிற்றரசர்களாகவும், தளபதிகளாகவும், போர்வீரர்களாகவும் இருந்து பல பேரரசுகளை நிறுவ துணை நின்றனர்.
11. பேரரசர்களின் கருவூலங்களை(பொக்கிசம்) பாதுகாப்பவர்களாக பண்டாரங்கள் இருந்தவர்கள்.
நன்றி
ஓம் நமசிவாய

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வீரசைவ பண்டாரம் தோற்றம்

பண்டாரம் அல்லது பண்டாரத்தார் என அழைக்கப் பெறுவோர் வீரசைவ குலத்தைச் சார்ந்தவர்களாவர்,,. ஆண்டிப் பண்டாரம், பண்டராம், ஜங்கம், யோகிஸ்வரர், லிங்காயத், வைராவிகள், புலவர், கன்னடியர், ஜங்கமர் போன்ற 19 உட்பிரிவைச் சார்ந்தவர்கள். பண்டாரம் சாதியினர் பெரும்பாலும் கோவில்களில் காவடி கட்டுதல், பூக்கட்டுதல் போன்றவற்றை செய்து வருகின்றனர். தற்பொழுது அனைத்து விதமான தொழில்களும் செய்கின்றனர். இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வரப்படாத கோயில்களில் பணிபுரிபவர்கள் தான் ஆண்டிப்பண்டாரங்கள். தோற்றம் வீரசைவ சமயத்தைக் கன்னடத்தில் 1125-1165 ஆண்டுகளில் வாழ்ந்த பசவண்ணர் தோற்றுவித்தார். இவர் கன்னட பிராமணர் குலத்தில் தோன்றியவர். 14 ஆம் நூற்றாண்டில் இது தமிழ்நாட்டில் பரவத் தொடங்கியது. 15 ஆம் நூற்றாண்டில் நவலிங்க லீலை முதலான சில நூல்கள் தமிழில் தோன்றின. பிற்காலத்தில் துறைமங்கலம் சிவப்பிரகாசர் இதனை வலுவாக்கினார்.

வீரசைவம் வரலாறு

வீரசைவம் என்றால் என்ன ?  வீரசைவர்கள் யார் ?  வீரசைவதீன் சிறப்பு தன்மைகள் என்ன ?   சைவம் என்றால் ஒளி,  சைவம் என்றால் சிவம்,  சைவம் என்றால் சாந்தி  வீரசைவம் என்ற வார்த்தையை பயன்படுத்திய உடனேயே இது எதாவது மற்ற மதங்களை தாக்குவதற்காக உருவாக்கப்பட்ட மதபிரிவோ என்று யாரும் எண்ண வேண்டாம்.    பொதுவாக சிவனை தவிர வேறு வேறு எவரையும் வீரசைவர்கள் வணங்க மாட்டார்கள்.  சிவாகமங்கள் தவிர வேறு எதையும் படிக்க மாட்டார்கள்.   சிவனடியாரை தவிர வேறு எவரையும் அடியார் என ஏற்று கொள்ள மாட்டார்கள்.  இதில் உறுதியாக இருப்பதினால் அந்த உறுதி நமது இதயத்தை வீரம் பொருந்தியதாக மாற்றி விட்டதினால் தான் நமது பண்டாரசமயத்திற்கு வீரசைவம் என்ற பெயர் வந்ததக பொதுவாக சொல்லப்படுகிறது. பல மொழியியல் வல்லுநர்கள் வீ என்ற முதல் எழுத்து சிவனை குறிப்பதாகவும் ர என்ற இரண்டாம் எழுத்த ஜீவனை குறிப்பதாகவும் விளக்கம் தருகிறார்கள்.  இதற்கு தத்துவார்த்த ரீதியில் வேறொரு பொருளும் சுட்டி காட்டப்படுகிறது. ஐந்து புலன்களை வெல்வதே நிஜமான வீரம் அப்படி புலன்களை வெல்லும் மார்கத்தை இந்த சை...