திருமணம் வாழ்த்து மடல் வாழையடி வாழையாக வாழ்ந்திருக்கும் பந்தம்
வாழ்வாங்கு வாழவேனும் நல்லா வாழ்த்தவேணும் சொந்தம்வாய்திறந்து வாழ்த்துப்பாடி வாசமலர் தூவ வந்தோம்
வந்திருக்கும் வீரசைவர்களெல்லாம் நல்லாசிகளை தந்தோம்...
பண்டாரத்தார் அனைவரும் பல்லாண்டு வாழ்த்து சொல்லனும்
லிங்காயத்தார் அனைவரும் அத்தங்கங்களை வாழ்த்தனும்
ஜங்கமர்கள் அனைவரும் ஓங்கார புகழ் பாடனும்
வீரசைவர் அனைவரும் மணமக்களுக்கு வீரசைவ பண்புகளை சொல்லனும்...
தேசிகர்கள் அனைவரும் திருவாசகங்களை சொல்லனும்
குருக்கள் அனைவரும் திருமந்திரங்களை படிக்கனும்
புலவர்கள் அனைவரும் பல கவிதைகளை பாடனும்
பூசாரிகள் அனைவரும் புனித திருநீற்றை வழங்கனும்...
தம்பிரான்கள் அனைவரும் இளந்தம்பதிகளை வாழ்த்தனும்
கோவம்சத்தார் அனைவரும் கோடிமலர் தூவனும்
சிவாச்சாரியார் அனைவரும் சிவகானம் பொழியனும்
யோகிஸ்வரர் அனைவரும் யாசகங்கள் செய்யனும்...
அய்யாமார்கள் அனைவரும் அருள்வாக்கு கொடுக்கனும்
அய்யர்மார்கள் அனைவரும் அர்ச்சதைகள் தூவனும்
ஆண்டிபண்டாரத்தார் அனைவரும் முருகனை வேண்டி பாடனும்
கன்னடியர் அனைவரும் திருபன்னிசை பாடனும்...
மணியக்காரர் அனைவரும் மனசார வாழ்த்தனும்
மூர்த்திகள் அனைவரும் பல கீர்த்திகளை தந்திடனும்
ஜோகிகள் அனைவரும் இந்த ஜோடிகளை வாழ்த்தனும்
உவச்சர்கள் அனைவரும் உளமார வாழ்த்தனும்...
வைராவிகள் அனைவரும் வந்திருந்து வாழ்த்தனும்
வைராகிகள் அனைவரும் வரவேற்பு தந்து சிறப்பிக்கனும்
ஓதுவார்கள் அனைவரும் நல் வேதங்களை படிக்கனும்
பொதுமக்கள் அனைவரும் நம்ம கூட்டம் கண்டு திகைக்கனும்...
எங்க சொக்கநாதர் குலத்தில் வந்த திருநிறைசெல்வன் ஹரிஹரனுக்கும்
எங்க சொக்கதங்கம் மீனாட்சியாய் திருநிறைசெல்வி மோனிசாவுக்கும்
தங்க பல்லாக்கில் அமரவைத்து தேவாதி தேவர்களை அழைத்து வைத்து
வாங்க அனைவரும் வாங்க வாழ்த்து சொல்லி திருக்கல்யாணம் நடத்துவோம்...
வந்தவர்க்கு வயிறார விருந்து படைத்து
வாழ்த்தியவர்க்கு புன்னகையை பரிசா கொடுத்து
அந்த புன்னகையோடு என்றும் வாழ்க்கையில் சிறப்பு பெற்று
நம் குலம் விளங்க வீரசைவனை ஈன்றெடுத்து
நம் குலம் பெறுக பண்டாரத்தியை பெற்றெடுத்து
பதினாறுவகை செல்வங்களை பெற்று
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
மணமக்கள் வாழ்க பலகோடி நூறாயிரம் ஆண்டு...
தில்லையம்பலம்
இப்படிக்கு
உங்கள் சொந்தம்
க.தனசேகரன்
இராமநாதபுரம்.

கருத்துகள்
கருத்துரையிடுக