இந்து |
|---|
சிவபெருமானுடன் சம்மந்தமான அனைத்தும் சைவம் என்று அறியப்பெறுகிறது. சைவநெறியென்றும், சிவநெறியென்றும், சிவ வழிபாடென்றும் சைவ சமயம் வழங்கப்பெறுகிறது. சிவவழிபாடு தமிழர்களின்குறிஞ்சி நிலத்தெய்வமான சேயோன் வழிபாட்டிலிருந்து தோன்றியதாகும். ஆதி சைவம், வீர சைவம், சித்தாந்த சைவம் என பல வகை பிரிவுகளை உள்ளடக்கிய இச்சமயம், இந்து மதத்தின் வைணவம், சாக்தம், கௌமாரம், காணாபத்தியம் முதலிய இந்து சமயப்பிரிவுகளையும் தன்னுள் இணைத்துக் கொண்டது. கல்லாடம் எனும் நூல் மூலம் முதல் தமிழ்ச்சிற்றிலக்கியத்தை தோற்றுவித்தது, பக்தி இலக்கிய காலத்தில் நாயன்மார், சமயக்குரவர் போன்றோரின் எழுச்சியால் எண்ணற்ற சைவ இலக்கியத்தினை படைத்தது என்று சைவம் தமிழுக்கு ஆற்றிய தொண்டால் 'சைவத்தமிழ்' என்று அழைக்கப்பெறுகிறது. |
பண்டாரம் அல்லது பண்டாரத்தார் என அழைக்கப் பெறுவோர் வீரசைவ குலத்தைச் சார்ந்தவர்களாவர்,,. ஆண்டிப் பண்டாரம், பண்டராம், ஜங்கம், யோகிஸ்வரர், லிங்காயத், வைராவிகள், புலவர், கன்னடியர், ஜங்கமர் போன்ற 19 உட்பிரிவைச் சார்ந்தவர்கள். பண்டாரம் சாதியினர் பெரும்பாலும் கோவில்களில் காவடி கட்டுதல், பூக்கட்டுதல் போன்றவற்றை செய்து வருகின்றனர். தற்பொழுது அனைத்து விதமான தொழில்களும் செய்கின்றனர். இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வரப்படாத கோயில்களில் பணிபுரிபவர்கள் தான் ஆண்டிப்பண்டாரங்கள். தோற்றம் வீரசைவ சமயத்தைக் கன்னடத்தில் 1125-1165 ஆண்டுகளில் வாழ்ந்த பசவண்ணர் தோற்றுவித்தார். இவர் கன்னட பிராமணர் குலத்தில் தோன்றியவர். 14 ஆம் நூற்றாண்டில் இது தமிழ்நாட்டில் பரவத் தொடங்கியது. 15 ஆம் நூற்றாண்டில் நவலிங்க லீலை முதலான சில நூல்கள் தமிழில் தோன்றின. பிற்காலத்தில் துறைமங்கலம் சிவப்பிரகாசர் இதனை வலுவாக்கினார்.

கருத்துகள்
கருத்துரையிடுக